🔴 VIDEO Zee தமிழ் மலையக இளம்பெண் விவகாரம் – கண்ணீர் விட்டு கூறிய தாய் தந்தை!

மலையகத்தைச் சேர்ந்த இளம்பெண் சினேகா, தென்னிந்திய Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமபா சீனியர்ஸ்’ சீசன் 5 இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இலங்கையின் மலையகம் டயகம அக்கரப்பத்தனை சேர்ந்த இவரது முதல் சுற்றுப் பாடல் ஒளிபரப்பானதிலிருந்து, அவரது உடை மற்றும் நிகழ்ச்சியில் பகிர்ந்த கதைகள் தொடர்பாக இலங்கையிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

முன்னதாக, இலங்கையைச் சேர்ந்த பிற போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் பங்களிப்புகள் நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியிருந்தாலும், அந்த சம்பவங்களை சிலர் நிகழ்ச்சியின் TRP யிற்காக ஈழத்தின் வலியையும் மலையகத்தின் வறுமையையும் பயன்படுத்தியதாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சினேகாவின் பெற்றோர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த பிள்ளைய பாட விடுங்கோ🙏🙏 தாய்🥲🥲 தந்தை உருக்கம்

Posted by சசிகலா ரவிராஜ் on Sunday, June 1, 2025

அவரது திறமை மற்றும் முயற்சியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் நோக்கம், சினேகாவின் இசைத்திறனை முன்னிறுத்தி, அவரது பயணத்தை ஆதரிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி சினேகாவின் தயார் கூறியதாவது,

தற்போதும் எங்கள் பிள்ளைகளிடம் நல்ல உடைகள் இல்லை. தயவுசெய்து எனது மகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலை, நாங்கள் பொய் கூறவில்லை. தவறாக கூற வேண்டாம் , மனவேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!