🔴 VIDEO கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: பெண்கள் உட்பட 10 பேர் கைது!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?