வெடித்துச் சிதறப் போகும் 8 தளங்கள்: ஈரான் வெளியிட்ட பட்டியல்!

அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கிய பாலங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் மிகப்பெரிய மற்றும் உயரமான பாலத்தை அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து, இந்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானை “கற்காலத்திற்கு கொண்டு செல்வோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதிலாக ஈரானின் அதிகாரப்பூர்வ ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, பின்வரும் பாலங்கள் இலக்குகளாகக் குறிவைக்கப்படலாம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்: ஷேக் ஜாபர் அல்-அகமது அல்-சபா கடல் பாலம் (Sheikh Jaber Al-Ahmad Al-Sabah Sea Bridge)

ஐக்கிய அரபு அமீரகம் (UAE): ஷேக் சயீத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம்

சவூதி அரேபியா – பஹ்ரைன்: மன்னர் ஃபஹத் பாலம் (King Fahd Causeway)

ஜோர்டான்: மன்னர் ஹுசைன் பாலம், தமியா பாலம் மற்றும் அப்துன் பாலம்.

நேற்றைய தினம், ஈரானின் கரஜ் (Karaj) நகரில் அமைந்துள்ள, மத்திய கிழக்கின் மிக உயரமான பாலமான B1 பாலம் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின.

136 மீட்டர் உயரம் கொண்ட இந்தப் பாலம் இன்னும் கட்டுமானப் பணியில் இருந்தது. இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 95 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாலம் இடிந்து விழும் காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிபர் ட்ரம்ப், “ஈரானின் மிகப்பெரிய பாலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. இது ஆரம்பம் மட்டுமே! ஈரான் அழிந்து போவதற்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

ஐந்து வாரங்களாக நீடிக்கும் இந்தப் போரில், ஈரான் தனது முக்கியமான உட்கட்டமைப்புகளை இழந்து வரும் நிலையில், தற்போது வளைகுடா நாடுகளின் பாலங்களைக் குறிவைத்து ‘பதிலடிக்கு பதிலடி’ (Tit-for-tat) கொடுக்கத் தயாராகி வருவது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!