இயந்திரத் தட்டுப்பாடு: கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

இயக்கத்திற்குத் தேவையான போதிய இயந்திரத் தொகுதிகள் இல்லாததன் காரணமாக, தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இதற்கு முன்னர் தினமும் காலை 05.15 மணிக்கு கல்கிஸ்ஸையிலிருந்து ஆரம்பமாகி, காலை 05.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த நகராந்தர கடுகதி ரயிலும், பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலும், 2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மாத்திரம் இயக்கப்படவுள்ளன.

யாழ் தேவி கடுகதி ரயிலும் தற்போது தினமும் இயக்கப்படுவதில்லை என்பதுடன், அது ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய திருத்தத்தின் காரணமாக, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் காலை வேளையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது காங்கேசன்துறை வரை பயணிப்பதற்கு எந்தவொரு ரயிலும் இல்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நாட்களில் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் ஒரேயொரு ரயில் இரவு 08.00 மணிக்கு புறப்படும் இரவு நேர தபால் ரயில் மாத்திரமே ஆகும்.

ரயில் தட்டுப்பாடு காரணமாக வடக்கிற்கான ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் தற்போதே கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிலவும் இப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காண்பதற்கு, பொறுப்புவாய்ந்த திணைக்களத் தலைவர்களோ அல்லது போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளோ இதுவரை முறையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, எதிர்வரும் காலத்தில் இந்த ரயில் நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்