புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!

கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மை மற்றும் மோதல் காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Sri Lanka Air Force soldiers take up positions outside Sri Lanka’s main Welikada Prison in the capital Colombo on August 7, 2026, following reports that some prisoners were staging a protest inside. There have been two prison riots since early July, in which 10 guards and 23 inmates have been killed. (Photo by Ishara S. KODIKARA / AFP via Getty Images)

சம்பவத்தையடுத்துப் பாதுகாப்புப் படையினரின் உடனடித் தலையீட்டினால் தற்போது அங்கு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கலவரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது கைதிகளை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினரின் ஒத்துழைப்புப் பெறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் முப்படையினர் அடங்கிய பலத்த பாதுகாப்புத் வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, சிறைச்சாலையில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!