நீர்கொழும்பு, தலுபொத – பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கைதிகள் சிலர் சிறைச்சாலை கட்டிடத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் கூரை மீது ஏறியுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
