தனிப்பட்ட தகராறு காரணமாக 16 வயது சிறுவன் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (9) இரவு வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனுக்கும் பிறிதொரு குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!