இலங்கையை டிட்வா புயல் தாக்கிய மூன்று நாட்களில் சுமார் 215 கடுமையான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலேயே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில், பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே, சில தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிவடைந்துள்ளதாகவும், அவற்றுக்கு அணுகல் வீதிகள் இல்லை எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இடங்களைச் சீரமைப்பதற்கு கணிசமான காலம் தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். வான்வழி படங்கள் மூலம் சிறிய நிலச்சரிவுகளை அடையாளம் காண்பது கடினமானது.
இந்த நிலையில், பல்வேறு இடங்களைக் கண்காணிப்பதற்கு, 55 பேர் கொண்ட குழு நியமித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
