அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேர் காயம்! பலரின் நிலை கவலைக்கிடம்

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (12) அதிகாலை 3 மணியளவில் கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!