விமானங்கள் இல்லாததால் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பல இலங்கையர்கள்!

வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் வெளிச்செல்லும் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஈரானுடனான மோதல் காரணமாக இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையமும் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூதரக அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதற்கான ஆதரவையும் வழங்குவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேறுபவர்கள் ஈலாட் எல்லை வழியாக எகிப்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சரியான தங்குமிடங்கள் இல்லாமல் பழைய கட்டிடங்களில் வசிக்கும் சில இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அதன்படி, தாக்குதல்களின் போது தங்குமிடத்திற்கான தற்காலிக மாற்றுகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட அவசரகால திட்டத்தை உருவாக்கவும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர்களை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் தூதர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!