காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு

அடுத்த மாதம் உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார்.

கலைஞரான இவர், 2021ஆம் ஆண்டு முதல் தனது கனவில் வரும் சில நிகழ்வுகளை வரைந்து, அதில் தெரிய வரும் தகவல்களை வெளியுலகுக்குக் கூறி வருகிறார். இவை பெரும்பாலும் உண்மையில் நடந்தும் இருப்பதால், இவரை புதிய பாபா வங்கா என்கிறார்கள்.

இவர் ஏற்கனவே தனது கனவில் வந்தததை ஓவியமாக வரைந்து உருவாக்கிய முன்கணிப்புகளில், 2011 நிலநடுக்கம், பிரின்ஸ் டயானா மரணம், கரோனா பேரிடர் போன்றவையும் அடங்கும்.

இது மட்டுமல்லாமல் அடுத்த 2030ஆம் ஆண்டில் கரோனா போன்ற பெருந்துயரம் மீண்டும் வரும் என்றும் அவர் கணித்துள்ளார்.

அவர் எழுதியிருக்கும் புத்தகத்தில் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது தற்போது வைரலாகியிருக்கிறது. அதாவது, ஜப்பானில் வரும் ஜூலை 5ஆம் திகதி பேரழிவு ஏற்படப்போவதாக அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நாளில், ஜப்பானுக்குச் செல்லும் விமானங்களில் முன்பதிவுகள் குறைந்து, ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், புதிய பாபா வங்காவின் கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்று உலகப் பேரழிவுகளை முன்கணிக்க முடியாது என்றும், இவை வெறும் புரளி என்றும் ஜப்பான் நாட்டு அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அறிவிப்பினால், பல்வேறு வகையிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஜூலை மாதத்தில் விமான டிக்கெட்டுகள், விடுதிகள் முன்பதிவு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஜப்பானியர்கள் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா திட்டங்களையும் ரத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!