🔴 VIDEO பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் செம்மணி போராட்ட இடத்திற்கு சென்ற ஐ.நா ஆணையாளர்

புதிய இணைப்பு

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். 

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். 

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ் . வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா விளக்கு” போராட்ட களத்திற்கு நேரில் சென்று , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். 

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ” அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

முதல் இணைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் , தனது உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்கட்கிழமை (23) இலங்கையை வந்தடைந்தார்.

@a7tv.com

யாழ் வந்த ஐநா ஆணையாளர்! – வீதியில் திரண்டு நிற்கும் மக்கள் VolkerTurk JaffnaNewsToday jaffnatamilnewstoday srilankatiktok tranding viralnews srilankatiktok viralvideos jaffnanews jaffnatamilnewstoday jaffnanewstoday anurakumaradissanayake anurakumaradissanayake🔥🇱🇰 trendingpost jaffna

♬ original sound – A7tv – A7tv

செம்மணி மனித புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என்று பல அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையிலே ஐ.நா ஆணையாளர் இலங்கைக்கு தனது உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இலங்கையை வந்தடைந்த ஆணையாளர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என பல பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினருனும் பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.

அதன்பின்னரே தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!