15 வயது சிறுமி கருத்தரிப்பு: டிக்டொக் இளைஞனை தேடி பொலிஸார் வலைவீச்சு!

15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு கருத்தரித்துள்ளார்.

இந்த சிறுமி சுகயீனம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளின் போது சிறுமி கருத்தரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் களுத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி டிக்டாக்கில் அறிமுகமான இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் அந்த இளைஞன் தனது வீட்டில் ஒரு நாள் இரவு தங்கியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கில் அறிமுகமான இளைஞனின் முகவரி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

3cf01349-e92f-4b44-9571-3663f9f70192
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி!
pillayan
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும்! பாதுகாப்பு அமைச்சர்
Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!