இதுவரை ஹமாஸ் அமைப்பின் கட்டடங்களை தாக்கி வந்த இஸ்ரேல், தற்போது காசாவில் இருந்த ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது குண்டு வீசி தாக்கியது. இதில் 3 பேர் இறந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தொலைபேசியில் கடுமையாக திட்டி சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் காசாவில், இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 33 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தான் காசாவில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயம் தரைமட்டமாகி உள்ளது.
இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் யூத நாடாக இருக்கும் நிலையில் இந்த தேவாலயம் மீதான தாக்குதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. இந்த மோதல் போராக மாறி உள்ளது. 2023 அக்டோபர் மாதம் முதல் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதில் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் அழிவின் விளிம்பில் உள்ளது.
மொத்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசா மக்கள் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி உயிருக்கு பயந்து ஏராளமான மக்கள் காசாவை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இருந்த ஒரெயொரு தேவலயமும் கடும் சேதமடைந்துள்ளது.