தமக்கு எதிராக நேற்று குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக்குற்றப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தாம் வரவேற்பதாக, யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள, சிவில் செயற்பாட்டாளர் ஒருவர், நேற்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களின் சொத்துக்களைப் பராமரித்து வருவதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று, அவர் கோரியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு முறைப்பாட்டை வரவேற்கிறேன்! விசாரணை நிச்சயம் நடைபெற வேண்டும்: அப்போது தான் உண்மைகள் பகிரங்கமாக வெளிவரும்! #Shritharan #sritharan #Kilinochchi #TransparencyInternational
Posted by Shritharan Sivagnanam on Thursday, July 24, 2025
அதில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வரவேற்பதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற நிலையில், தமக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படும் போது அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.