தலைநகரின் சில பகுதிகளில் நடக்கும் அமானுஷ்ய சக்திகள் – அச்சத்தில் ஊர் மக்கள்

கொழும்பின் புறநகர் பகுதிகளான கொஸ்கம, அலுபோதல மற்றும் நிசல உயன பகுதிகளில் உள்ள வீடுகள் மீது மர்மமான முறையில் கல் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

சுமார் மூன்று மாதங்களாக இந்த கல் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இரவில் மட்டுமே நடந்த இந்த தாக்குதல்கள், தற்போது பகலிலும் நடப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் தங்கள் வீடுகளில் வசிக்கக் கூட அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொஸ்கம பொலிஸாருக்கு தகவல் அளித்த பிறகு, அதன் அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலை காரணமாக சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JVP
தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழில் குத்தாட்டம் - பல்வேறு தரப்பினரும் விசனம்!
aadi-ammavasai
ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!
image
சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க!
New Project t (5)
காதலியைக் கொன்று விட்டுத் தன்னுயிரையும் மாய்த்த காதலன்!இலங்கையில் பதிவான மற்றுமொரு கொடூர சம்பவம்!
New Project t (4)
முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருவர் கைது!
nawalapity-2
கொலையில் முடிந்த தகாத உறவு ; இலங்கையை உலுக்கிய சம்பவம்!