நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு!

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டி இன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய அரசியல்வாதி எனவும் அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!