யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நாக விகாரையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!