முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மீண்டும் ராஜபக்சர்களின் விம்பத்தை கட்டியெழுப்ப திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட தரப்பினர் குறித்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதியை பார்ப்பதற்காக பரிசுபொருள்கள் மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்துள்ளனர்.

மகிந்தவின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டால், அவருக்கு வீடு வழங்க தலையிடுவதாக பல முன்னணி பிக்குகள் தன்னிடம் கூறியதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தற்போது சில பிக்குகளால் ஒரு போராட்டம் கட்டமைக்கப்படுகிறது” என்றார்.

இதன்போது “நீங்கள் உங்கள் ஒரு மைல் தூரத்தைத் தொட்டால் கூட, மகா சங்கத்தினர் முன்வருவார்கள்” என்று சில பிக்குகள் பகிரங்கமாக இதன்போது அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த நாட்களில் மகிந்தவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அவரைப் பார்க்க தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளின் சலுகைகளை, வீடுகள் உட்பட, அவற்றை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தில் கவனம் செலுத்தியுள்ளர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!