சட்டத் தேவைகள், நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்து, அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்த செயல்முறையால் நாடு முழுவதும் மின்வெட்டு சாத்தியமாகலாம் என இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), எச்சரித்துள்ளது.

அரசாங்கம் அவசரமான, குழப்பமான மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் துறை சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), குற்றம் சாட்டியுள்ளது.
இந்த செயல்முறையானது நாடு முழுவதுமான மின் தடை, பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் முழுத் துறையையும் சீர்குலைக்க வழிவகுக்கும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
சட்டத் தேவைகள், நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்து, அதிகாரிகள் “மிகவும் எளிமையான முறையில்” பணியாளர் பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
“தற்போதைய சீர்திருத்த அதிகாரிகளுக்குள் சரியான பொறுப்புக்கூறல் மற்றும் நடைமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் மிக முக்கியமான துறையாக இருந்தாலும், சிலர் சீர்திருத்த செயல்முறையை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். இறுதி விளைவு என்னவாக இருக்கும்?” என்று CEBEU இணைச் செயலாளர் பொறியாளர் அமல் அரியரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தற்போதைய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், ரூ. 5 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது, இது “போதுமானதாக இல்லை”, மேலும் இது மிகவும் திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலை தேட வழிவகுக்கும் என CEBEU தொழிற்சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வெளியேறினால், துறை சரிந்துவிடும், மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் கூறியுள்ளது.