மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ஜஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.

பையைத் திறந்து பரிசோதித்தபோது, 252 சிறிய பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை இதனைத் தொடர்ந்து குறித்த போதைப் பொருளை கைப்பற்றிய பொலிஸார் நீதிமன்றத்தில் அதனை ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!