அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை சந்திக்கவுள்ள அநுர – இன்று பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார். வரும் புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐ.நா. பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

மேலும், விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உட்பட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். அதேபோல், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சிறப்பு சந்திப்பிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த விஜயத்திற்கு ஜனாதிபதியுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து செல்கிறார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!