வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு காரணமான சந்தேகநபர்கள் குறித்து தகவல் கிடைத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (23.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்றையதினம் பிரதேச சபை அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
