சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பிரதான சந்தேக நபர் கைது!

பூநகரி – சங்குப்பிட்டி பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட குற்ற தடுப்பினரால் இவர் இன்று (11.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

குறித்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!