இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியான தகவல்!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.

“தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எமது பாதுகாப்புப் படைகள் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன

எனவே, தேசியப் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன், திட்டமிட்ட குற்றக்கும்பல் தலைவர்கள் நாட்டிற்குத் திரும்பத் திட்டமிடுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த அவர், தனது முந்தைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்தக் கடத்தல் பாதையை விட்டுவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அந்தப் பாதையை விட்டு வெளியேற விரும்புவது ஒரு நேர்மறையான விடயம்,” என்று மட்டுமே தாம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!