2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை தயாரிப்பது இலகுவாகியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வாகன இறக்குமதி வேகம் குறைவடைவதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் வருமான அதிகரிப்பு வேகமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பற்றிய வரைவு அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை அறிவித்து பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையின்படி, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில், பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121(5)(i) இற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியபோதே வரைபு அறிக்கை இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.

அதற்கமைய, பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் (PFM), பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் (PDM), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்குள் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!