வட மாகாணத்தில் அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தில் பதிவான சைபர் குற்றங்களின் விபரங்களை அவர் பின்வருமாறு பட்டியலிட்டார்:

2020: 24 குற்றங்கள்

2021: 577 குற்றங்கள்

2022: 654 குற்றங்கள்

2023: 472 குற்றங்கள்

2024: 1,539 குற்றங்கள்

மேலும், 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி