முல்லைத்தீவில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் அவரின் உடலம் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்திக் கொண்டிருந்த போது, கடந்த 28 ஆம் திகதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்