இலங்கையில் கடமையின்போது உயிரிழந்த மற்றுமொரு அதிகாரி!

குருணாகல் பகுதியில் நேற்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கடமையின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொவத்த – வீரபொக்குண வீதியில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம்
நேர்ந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய குறித்த நபர், வீரபொக்குண ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளையில் தற்காலிக ஊழியராக 2007 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர், 2017 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் நிரந்தரப் பணியாளரானார்.

அண்மையில் ஹெட்டிப்பொல உப மின் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இவர், அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஒருவரென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!