அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிவாரணப் பணிகளை சுயாதீனமாக மேற்கொள்வதில் கிராம உத்தியோகத்தர்கள் மீது பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.
