கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் பொறுப்பான பதவியில் அரச மருத்துவ அதிகாரியாக இருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன முன் அனுமதி இன்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டது தெரியவந்ததாக அமைச்சின் கடித தலைப்பின் கீழ் முறையான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிட்டப்பட்ட இந்த அறிக்கைகள் பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
