நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்!

தமிழ்த் தேசிய பேரவைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் (Seeman) இடையிலான சந்திப்பு ஒன்று நீலாங்கரையில் இடம்பெற்றுள்ளது.

சீமானின் இல்லத்தில் இன்று (19) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த சந்திப்பு சுமார் 2.00 மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம், ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

அத்துடன் இந்த சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப்பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!