எரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சிறிது குறைந்துள்ளதையும் அவதானிக்க முடிவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அமெரிக்க – ஈரான் இடையே அதிகரித்து வரும் முறுகல் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டிட்வா புயலை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு, ஈரான் – அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றம் ஒரு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!