இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறான ஓட்டுநர்களைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் காவல்துறை மாஅதிபர் குறிப்பிட்டார்.
