யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை: களத்தில் இறங்கிய சி.ஐ.டி

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள் , விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால் , பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும் , பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்