வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து: பெண் ஒருவர் கைது

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், , குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று (23.02) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் , வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), ரேவத (40878) பொலிஸ் கொன்ஸ்தாபிள நவகீதன் (8098) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்டு கத்தி குத்தை மேற்கொண்ட பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.

இதன்போது கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில்,

அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும் அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கும் அங்கு துப்பரவு பணி வேலை செய்துவரும் குறித்த சந்தேக நபருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சந்தேக நபரை அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.

இவ் முரண்பாடு காரணமாகவே வேலையால் நிறுத்தப்பட்ட பெண்ணால் குறித்த கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்