நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் காவல்துறை அதிரடி நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பீப்பாய்கள், அதிக கொள்ளளவான போத்தல்கள் ஆகியவற்றில் எரிபொருளை நிரப்பக்கூடாது என, நிரப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருளைப் பதுக்குவோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் புலனாய்வுத் துறையினர் சோதனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி