யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!