ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் பாதுகாப்பாக விடுவிப்பு!

அண்மையில் ஈராக் தலைநகரான பாக்தாத்தில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி பாக்தாத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ‘கதாயிப் ஹிஸ்புல்லாவினரால் இவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பெண் ஊடகவியலாளர் விடுவிக்கப்படுவார் என அக்குழு அறிவித்ததோடு, அவர் விடுவிக்கப்பட்டதும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தது.

இந்நிலையில் குறித்த குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ள ஷெல்லி கிட்டில்சன் குறித்து மார்கோ ரூபியோ கூறுகையில், கிட்டில்சன் ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்குவதாக தெரிவித்தார்.

ஷெல்லி கிட்டில்சன் (வயது 49) பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், கடத்தப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் ஈராக்கிற்குள் நுழைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!