உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் இந்த மாற்றத்தை விரும்புகின்றது, அவர்களும் ஏனையோரும் தொடர்ச்சியான மோதல்களினால் சோர்வடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைச் சீர்செய்ய அமெரிக்கா உதவும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஈரான் இனி தனது மீள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கலாம். அவசியமான விநியோகப் பொருட்களை வழங்குவதோடு, அங்கு அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த நாம் கண்காணிப்பில் ஈடுபடுவோம்.

அமெரிக்காவைப் போன்றே இது மத்திய கிழக்கின் ‘பொற்காலமாக’ அமையும் என நான் நம்புகிறேன்” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்