போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானிய தூதுக்குழு இன்று (09) பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதை அந்நாட்டுக்கான ஈரானிய தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று இரவு பாகிஸ்தானைச் சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் முன்வைத்துள்ள 10 அம்ச முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையவுள்ளன. இதில் தடைகளை நீக்குதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இஸ்ரேலினால் போர்நிறுத்தம் மீறப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டி வரும் நிலையிலும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அழைப்பினை ஏற்று இந்த இராஜதந்திர நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!