போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 070 4755600 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தென்படும் போக்குவரத்து விதிமீறல்களை காணெளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்

புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று முதல் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தல் , அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி