ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளை பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினம் தமது அலுவலகங்களுக்கு வருகைதர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றினூடாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!