காலிப் பகுதியில் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது

காலிப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சர்வதேசப் பாடசாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் சாரேவன்துக்கடை சந்தியில் வைத்து, அங்கு சென்ற பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறத்தில் இவர் சிவப்பு மையினைத் தெளித்துள்ளார்.

இந்தச் செயல் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காலி பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காலி பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்