நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டைக் குடியுரிமை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு!

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும இரட்டை குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, சூரியப்பெரும இலங்கை கடவுச்சீட்டுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலிய குடியுரிமையை கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழியில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில், செயலாளர் மீதான இந்த இரட்டைப் குடியுரிமை சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்