வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 11.05.2026ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு குறித்த வீதியினை தடுத்து எல்லையிடப்பட்டுள்ள இடப்பரப்புக்குள் வதியும் தங்களிற்கு 1987ஆம் ஆண்டின 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவிற்கமைவாக அறிவித்தல் இத்தால் வழங்கப்படுகின்றது.

மேலும் குறித்த வீதியினை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

தவறும் பட்சத்தில், 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் சட்டத்தின் 59(3)ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கு அமைவாக அகற்றப்படும் செலவீனங்கள் தங்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கைகளுக்கும் தாங்கள் உட்பட நேரிடலாம் என்பதனையும் அறியத்தருகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தையிட்டி காணி அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பவானி வீதி தவிசாளரால் அடையாளம் காட்டப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!