யாழில் மதுபான போத்தலால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதேபகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மதுபான போத்தலினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர் அவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்