இலங்கையில் பாடசாலை ஒன்றில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் ஒரு மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுக்கச் சென்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவரை, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்