ஜோதிடர் நியமன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டித் வெற்றிவேலுக்கு அறிவிக்கப்பட்ட முதல்வரின் சிறப்பு அலுவலர் (OSD) நியமனம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோதிடர் ராதன் பண்டித்தின் சிறப்புப் பணி அதிகாரி (OSD) நியமனத்தை விஜய் தலைமையிலான தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றி கிடைக்கும் என்று முன்கூட்டியே கணித்தவர் ஜோதிடர் ராதன் பண்டித் இவர் தான் என்ற நிலையில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டதாக பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நியமனம் பல தரப்பினரிடமும், குறிப்பாக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்களிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

தவெக கட்சியின் பேச்சாளராகவும் ஜோதிடராகவும் அறியப்படும் ராதன் பண்டித், அண்மைய தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இவ்வாறிருக்கையில் இந்த நியமனத்திற்கு எழுந்த கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நியமனத்தை திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!