இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை! முதல்வர் விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கத் தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்